ஹன்னா ரிட்சி (ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த தரவு அறிவியல் விஞ்ஞானி) மற்றும் இந்து பத்திரிக்கையின் தகவல் குழு சேகரித்து தொகுத்த கட்டுரை 10-9-2024 ஆங்கில இந்து பத்திரிக்கையில் வெளியானது.
தமிழில் மோசஸ் பிரபு
2021 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 7லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர். இதில், 5லட்சம் இறப்புகள் குழந்தை மற்றும் தாயின் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டவை. அதாவது, அவர்களில் 70% க்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருந்தவர்கள் அதே ஆண்டில், உலகம் முழுவதும், ஐந்து வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 47லட்சம் குழந்தைகள் இறந்துள்ளனர்; அவர்களில் 24 லட்சம் குழந்தைகள் தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதாவது உலகளவில் 50% குழந்தை இறப்புகளோடு ஒப்பீடும் போது இந்தியாவின் புள்ளிவிவரம் சுமார் 20% என்ற அளவில் அதிகமாக உள்ளது இந்த குழந்தை மரணங்கள் பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. அதுகுறித்து சற்று விரிவாக பார்ப்போம்
புள்ளிவிவரங்களை கொண்டு சற்று நுணுக்கமாக ஆராயும் போது குழந்தைகள் வெறுமனே ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கவில்லை. ஊட்டச்சத்து குறைபாடு அந்த நிலைலையை மேலும் தீவிரப்படுத்துகிறது எனலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது மரணத்திற்கான முக்கிய காரணியாக உள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை குழந்தை இறப்புகள் ஏற்படுகின்றன என்பதை விளக்கப்படம் 1 இல் பார்க்கலாம்.
இதுவரை, மிக பெரிய அளவில் குறைந்த இறப்பிற்கு காரணம் பிறக்கும் போது குழந்தையின் எடை குறைவாக இருப்பது தான் , இது பெரும்பாலும் தாய் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது கர்ப்ப காலத்தில் தொற்று நோய்கள் ஏற்படுவதால் நிகழ்கிறது. குழந்தை பிறந்த முதல் சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் எடை குறைவாக இருக்கும் போதோ அல்லது ஊட்டச்சத்து ஆரோக்கியமான விகிதத்தில் வளர்ச்சியடையாதபோதோ தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான குழந்தைகள் எடைக்கு ஏற்ப உயரம் இல்லாமலும் உயரத்திற்கு ஏற்ப எடை இல்லாமலும் இருக்கின்றனர்
இது அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக உள்ளதா என ஆராய்ந்தால் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது, அங்கு குழந்தைகளுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் தொற்று நோய்களால் பாதிக்கப்படுவது பொதுவானவையாக உள்ளது படம் 2 இல், ஊட்டச்சத்து குறைபாடு இறப்புகள் செங்குத்து அச்சிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஒரு நபருக்கு கிடைமட்ட அச்சிலும் குறிபிடப்பட்டுள்ளது. அட்டவணையின் வலதுபுறத்தில் உள்ள பணக்கார நாடுகள் இடதுபுறத்தில் உள்ள ஏழை நாடுகளை விட 20 முதல் 50 மடங்கு வரை குறைவாக உள்ளது. சப்-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் ஊட்டச்சத்து குறைபாடு இறப்புகள் அதிகம். BRICS நாடுகள் விவரமும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது குழந்தை இறப்பு விகிதத்தில் ஏழை பணக்கார நாடுகளுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வு தெளிவாக தெரிகிறது.
புள்ளிவிவரப்படி சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது இந்தியாவில் 1990 ஆம் ஆண்டு முதல் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த சுகாதார அளவீடுகளை விளக்கப்படம் 3 காட்டுகிறது.
உலகம் முழுவதும், 1990 ஆம் ஆண்டில், சுமார் 66 லட்சம் குழந்தை இறப்புகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில், சுமார் 24 லட்சம் குழந்தை இறப்புகள் நடந்துள்ளது. இந்த அடிப்படையில் 1990களின் நிலைமைகளோடு ஒப்பீடும் போது இது சுமார் 63% குழந்தை இறப்புகள் குறைந்துள்ளன. ஊட்டச்சத்தில் ஏற்பட்ட மேம்பாடுகள் இந்த சரிவில் சிலவற்றை சாத்தியமாக்கியுள்ளன. இந்தியாவில், 24 லட்சத்திலிருந்து 5 லட்சமாக குறைந்துள்ளது இது கிட்த்தட்ட 80% வரை குறைந்துள்ளது.
தொற்று நோய்களைக் கையாள்வதில் ஏற்பட்ட முன்னேற்றமும் முக்கியமானது. நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இரண்டிற்கும் முக்கிய உறவு உள்ளது. இதன் பொருள் நோய்கள் குறைவாக இருந்தால், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உடல்நல அபாயங்களும் குறைவாக இருக்கும். கடந்த சில பத்தாண்டுகளில், சுத்தமான நீர், சுகாதாரம், முறையாக கை கழுவுதல் மற்றும் சிறந்த மற்றும் பரவலான சிகிச்சைகள் ஆகியவற்றால் வயிற்றுப்போக்கு நோய்களால் ஏற்படும் இறப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. ஆண்டிமலேரியல் மற்றும் படுக்கை வலைகள் மலேரியா இறப்பு விகிதங்களைக் குறைத்துள்ளன. பெரும்பாலான குழந்தைகளுக்கு காசநோய்க்கு எதிரான தடுப்பூசி போடப்படுகிறது, மேலும் ரோட்டா வைரஸுக்கு எதிரான எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கர்ப காலத்தில் அல்லது குழந்தை பிறந்த பிறகு தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆதரவும் முன்பைவிட தற்போது மேம்பட்டுள்ளது. திறமையான சுகாதாரப் பணியாளர்களால் அதிகப் பிரசவங்கள் நடைபெறுகின்றன, அதாவது குழந்தைகள் மிகக் குறைந்த எடையுடன் பிறக்கும் போது, தொழில்முறை மருத்துவப் பணியாளர்கள் அவர்களுக்கு உதவுகின்றனர் முறையான ஆலோசனைகளை வழங்குகின்றனர்.ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் மற்றும் சுகாதார நிலைமைகளை முறையாக கையாண்டால் ஊட்டச்சத்து குறைபாட்டின் மோசமான விளைவுகளை மேலும் குறைக்கலாம். மறுபுறம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதும் மிக முக்கியமான செயல்பாடாக இருக்க வேண்டும்.